ஆவடி சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் ஆவடி கிழக்கு மாநகரப் பொறுப்பாளர் அன்புத்தம்பி பாலமுருகன் அவர்களின் தந்தையார், மதிப்பிற்குரிய ஐயா சுப்பிரமணி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து துயருற்றேன்.
அப்பாவை பிரிந்து வாடும் தம்பி பாலமுருகனுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா சுப்பிரமணி அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!


