நாம் தமிழர் கட்சி – சங்ககிரி சட்டமன்றத் தொகுதியைச்
சேர்ந்த களப்போராளி அன்புத்தங்கை சோபனா அவர்களின் மாமியாரும், மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளருமான
அன்புத்தம்பி சரவணன் அவர்களின் தாயாருமான அம்மா வெள்ளையம்மாள் குப்புசாமி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரும் அடைந்தேன்.
தாயை இழந்து வாடும் தம்பி சரவணன் அவர்களுக்கும், குடும்பத்தாருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அம்மா வெள்ளையம்மாள் குப்புசாமி அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்!



