நாம் தமிழர் கட்சி – கும்மிடிப்பூண்டி தொகுதி, கோங்கல்மேடைச் சேர்ந்த சுற்றுச்சூழல் பாசறை
மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி அ.சத்யபிரகாஷ் அவர்கள் மறைவெய்திய துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
அனைத்து உயிர்களுக்குமான அரசியலை முன்னெடுக்கும்
நாம் தமிழர் கட்சி எனும் புரட்சிகர அரசியல் பெரும்படையில் தன்னை இணைத்துக் கொண்டு, துடிப்புடன் களப்பணியாற்றிவந்த தம்பி சத்யபிரகாஷ் அவர்களை இழந்திருப்பது மிகுந்த மனத்துயரத்தைத் தருகிறது.
தம்பியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும்,
உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், என்னுடைய ஆறுதலைத்
தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
தம்பி சத்யபிரகாஷ் அவர்களுக்கு
என் கண்ணீர் வணக்கம்!



