க.எண்: 2026070214
நாள்: 02.07.2026
அறிவிப்பு:
தமிழகத்திற்கான டெல்லி சிறப்பு பிரதிநிதியாக தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழரை நியமிக்காமல் வெளி மாநிலத்தவரை நியமித்ததைக் கண்டித்தும், தமிழகத்தின் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் வேலைவாய்ப்பில் 80% தமிழர்களுக்கு ஒதுக்கீடு செய்யும் சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற கோரியும், வெளியார் வருகையால் சட்டம்- ஒழுங்கு சிக்கல், அதிகரிக்கும் வேலை வாய்ப்பின்மை மற்றும் தமிழர் தாயக உரிமை பாதிப்பு இவைகளில் இருந்து காத்திடும் உள் நுழைவுச் சீட்டு (Inner Line Permit) சட்டத்தை கொண்டுவரக் கோரியும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், வருகின்ற ஆனி 21ஆம் நாள் (05-07-2026) ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் சென்னை பெரம்பூர் தொகுதியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைந்த சென்னை மாவட்டம் நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
கண்டனவுரை:
இடும்பாவனம் கார்த்திக்
இளைஞர் பாசறை – மாநில ஒருங்கிணைப்பாளர்
நாள்:
ஆனி 21 ஞாயிற்றுக்கிழமை | 05-07-2026 காலை 10 மணிக்கு
இடம்: மகாகவி பாரதி நகர் (MKB NAGAR), 2A பேருந்து நிறுத்தம் அருகில்
சென்னை
பெரம்பூர்
இம்மாபெரும் கண்டன ஆறப்பட்டத்தில், கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி உள்ளிட்ட கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், ஒருங்கிணைந்த சென்னை மாட்டத்திற்குட்பட்ட அனைத்து சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி



