முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் சட்டமன்றத்…

0

நாம் தமிழர் கட்சி – திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் சட்டமன்றத் தொகுதி, பாலூர் கிராமத்தைச் சார்ந்த, செந்தமிழர் பாசறை வளைகுடாவின், வணிகர் பாசறை பொறுப்பாளர் அன்புத்தம்பி சுல்தான் அவர்களின் தாயாரும், செந்தமிழர் பாசறை வளைகுடா துணைத் தலைவர் தங்கை ஆயிஷா சுல்தான் அவர்களின் மாமியாருமான அம்மா ஜம்ரூத் பீவி அவர்கள் மறைவெய்தினார் என்ற துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.

பேரன்புகொண்டு நேசித்த அம்மாவை இழந்து வாடும் தம்பி சுல்தான் மற்றும் சகோதரி ஆயிசா சுல்தான் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

அம்மா ஜம்ரூத் பீவி அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திஇயற்றமிழ் மூலம் இசைத் தமிழ் தந்த தமிழ்ப் பெருங்கவி! சங்கத்தமிழ்…
அடுத்த செய்திநாம் தமிழர் கட்சி – புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சட்டமன்றத்…