தலைமை அறிவிப்பு – உலகத்தமிழ்க் கிறித்தவர் இயக்கம் நடத்தும் உரையாடுவோம் வாருங்கள்! கேள்விகளுக்குப் பதிலளித்து கருத்துரை: செந்தமிழன் சீமான்

12

க.எண்: 2025100952

நாள்: 31.10.2025

அறிவிப்பு:

உலகத்தமிழ்க் கிறித்தவர் இயக்கம் நடத்தும்

உரையாடுவோம் வாருங்கள்!
கேள்விகளுக்குப் பதிலளித்து கருத்துரை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர் | நாம் தமிழர் கட்சி

நாள்: ஐப்பசி 18 | 0411-2025 காலை 10 மணிமுதல் பிற்பகல் 01 மணிவரை

இடம்: செல்வ லட்சுமி மண்டபம், மதுரை சாலை,
மணப்பாறை

 

உலகத்தமிழ்க் கிறித்தவர் இயக்கம் சார்பாக ஐப்பசி 18ஆம் நாள் 04-11-2025 காலை 10 மணிமுதல் பிற்பகல் 01 மணிவரை மணப்பாறை, மதுரை சாலை,
செல்வ லட்சுமி மண்டபத்தில் ‘உரையாடுவோம் வாருங்கள்’
என்ற தலைப்பில்
மாபெரும் கலந்துரையாடல் கூட்டம் நடைபெறவிருக்கிறது. இதில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, உறவுகளின் அரசியல் கேள்விகளுக்குப் பதிலளித்து கருத்துரையாற்றவிருக்கிறார்.

இம்மாபெரும் கலந்துரையாடல் நிகழ்வில் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதிப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – தமிழ் மீட்சிப் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்