வீரப்பெரும்பாட்டனார் தீரன் சின்னமலை மற்றும் அவரது படைத் தளபதிகள் வீரப்பெரும்பாட்டன்கள் குணாளன் நாடார், கருப்பன்சேர்வை ஆகியோரின் நினைவுநாளையொட்டி 03-08-2025 அன்று, நாம் தமிழர் கட்சியின் உழவர் பாசறை சார்பாக தேனி மாவட்டம் அடவுப்பாறையில் நடைபெற்ற ஆயிரக்கணக்கான மாடுகளுடன் தடையை மீறி மலையேறி மாடு மேய்க்கும் போராட்டத்திற்கு முன்னதாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் மூன்று வீரப்பெரும்பாட்டன்களின் திருவுருவப்படத்திற்கு மலர்வணக்கம் செலுத்தி வீரப்புகழ் போற்றினார்.
இந்நிகழ்வில், ஆயிரக்கணக்கான நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் உடன் பங்கேற்றனர்.






