நாம் தமிழர் கட்சி – கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த மகளிர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தங்கை பகவதியம்மாள் அவர்களின் தாயார் அம்மா இசக்கித்தாய் அவர்கள் மறைவெய்தினார் எனும் செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.
அம்மாவை இழந்து பெருந்துயரில் வாடும் தங்கைக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அம்மா இசக்கித்தாய் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!



