முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தாய்மொழியில் பயின்று தம்முடைய கூர்த்த அறிவாற்றலால் இந்தியாவை அணுவாற்றல் மிக்க…

0

தாய்மொழியில் பயின்று தம்முடைய கூர்த்த அறிவாற்றலால் இந்தியாவை அணுவாற்றல் மிக்க நாடாக உயர்த்திய பெருந்தமிழர்..!

தம் அறிவியல் தொழில்நுட்பத் திறன் கொண்டு இந்தியப் பெரு நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்திய ஏவுகணை நாயகன்..!

குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து, குடிசையில் வாழும் மக்களின் குரலாக ஒலித்த பெருந்தகை!

முதல்முறையாக இந்த நாட்டின் கடைக்கோடி குடிமகனின் உயர்வுக்காகவும் சிந்தித்த ‘இந்தியாவின் முதல் குடிமகன்’!

மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பாத சுமையைக் குறைத்த அறிவியல் மாமேதை..!

மாணவ கண்மணிகளை மகத்தான இலட்சியங்களைக் கனவு காண அறிவுறுத்திய மாபெரும் தலைவர்..!

அறிவியலாளர், ஆசிரியர், எழுத்தாளர், கவிஞர், மனிதநேய மிக்க மாண்பாளர், எளிய மக்களிடம் எவ்வித பகட்டும் இன்றி இனிமையாகப் பழகும் உயர்ந்த பண்பாளர்..!

இந்திய விண்வெளி திட்டங்களின் விடிவெள்ளி, தமிழினத்தின் அறிவியல் அடையாளம் பெருமதிப்பிற்குரிய ஐயா அப்துல்கலாம் அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்!

முந்தைய செய்திதமிழ்நாட்டின் முதுபெரும் அரசியல் தலைவர், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர்,…