தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2026-29 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதற்கு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்ட, என்னுடைய ஆருயிர் இளவல் கோ.க.ம.தமிழ்க்குமரன், அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை அறிந்து பெரும் மகிழ்ச்சி அடைந்தேன்.
தமிழ்த் திரைக்கலையின் தரம் மென்மேலும் உயர்ந்து, திரைக்கலைஞர்களின் வாழ்வு செழித்திடும் வகையில் சிறப்புற பணியாற்றி சாதனை படைத்திடவும், ஏற்ற பொறுப்பிற்குப் பெருமை சேர்த்திடவும், அன்புத்தம்பி கோ.க.ம.தமிழ்க்குமரனுடன் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய பொறுப்பாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புதிய துணைத்தலைவர்கள் ஐயா கமலக்கண்ணன் மற்றும் அன்புத்தம்பி ஆர்.கே.சுரேஷ், புதிய செயலாளர்கள் அன்புத்தம்பி Five Star கதிரேசன் மற்றும் ஐயா ராதா கிருஷ்ணன், புதிய பொருளாளர் ஆருயிர் தம்பி சுபாஷ் சந்திரபோஸ், புதிய இணைச்செயலாளர் பாசத்திற்குரிய அம்மா சுஜாதா விஜயகுமார் உள்ளிட்ட புதிய பொறுப்பாளர்கள் அனைவருக்கும் என்னுடைய நெஞ்சம் நிறைந்த அன்பும், வாழ்த்துகளும்!



