முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக்கு முன்பு தமிழ் பிள்ளைகள் அறிவிற் சிறந்தவர்களாக…

0

ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக்கு முன்பு தமிழ் பிள்ளைகள் அறிவிற் சிறந்தவர்களாக விளங்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு ஆசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாகத் திகழ்ந்த யாழ்ப்பாண நூலகத்தை, சிறு விதையிலிருந்து உயர்ந்தோங்கும் ஆலமரம் போல தன் வீட்டின் வரவேற்பறையிலிருந்து தொடங்கி நடத்திய மாமனிதர்..!

நவீன அறிவியலோ, வளர்ந்த தொழில்நுட்பமோ, இன்றைக்கு உள்ள இணைய வசதியோ ஏதும் இல்லாத, ஆங்கிலேயர் ஆட்சியில் அடிமைப்பட்டிருந்த சோதனைமிக்க காலகட்டத்தில் ஈழத்தாயகத்தில் வாழும் ஏழைக்குழந்தைகளும் கல்வி பெற வேண்டும்,
உலக அறிவு எட்ட வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் பல்லாயிரம் நூல்களுடன் பரந்து விரிந்த பெரும் நூலகம் சிங்கள இனவெறித் தீயில் எரிந்த பிறகும், உலகத்தமிழர்களின் ஆன்மச் சின்னமாக மறையாத வடுவாகத் திகழ்ந்து, சாம்பலிலிருந்து உயிர்த்தெழும் பீனிக்ஸ் போல, மீண்டும் உயிர்ப்புடன் திகழும் யாழ். நூலகமே தமிழர்களின் அறிவுக்கருவூலமாகும்.

யாழ். பொது நூலகத்தை அமைப்பதற்குத் தம்முடைய இல்லத்தையே கொடையாகக் கொடுத்து, கிடைத்தற்கரிய பல ஓலைச்சுவடிகளையும், அறிவூட்டும் நூல்களையும் தேடி தேடி சேகரித்து அன்னைத் தமிழுக்கு அணி சேர்த்து ஆலயம் அமைத்த போற்றுதற்குரிய பெருந்தகை..!

பல்லாயிரம் ஆண்டுகள் தொன்மை வாய்ந்த தொல்தமிழர் அறிவு மரபின் தொடர்ச்சியாகவும், தமிழ் அறிவு புரட்சியின் முன்னோடியாகவும் திகழ்ந்த பெருந்தமிழர், நம்முடைய பாட்டன் தமிழ்க்காவலர், ஈழத்தாயகத்தின் தமிழ்ச்செல்வர் க.மு.செல்லப்பா அவர்களின்
130வது பிறந்தநாளில் ஐயாவின் பெரும்புகழ் போற்றுவோம்!

முந்தைய செய்திதமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2026-29 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகளைத்…
அடுத்த செய்திநாம் தமிழர் கட்சி – கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் சட்டமன்றத்…