இந்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கலைத்துறையில் சாதித்த திருத்தணி ஓதுவார் ஐயா சுவாமிநாதன், அழிந்து வரும் குரும்பா பழங்குடியின ஓவியக்கலையை மீட்டெடுத்த
ஓவியக் கலைஞர் ஐயா நீலகிரி கிருஷ்ணன், வெண்கல சிலை வடிப்பதில் சாதித்த சிற்பக் கலைஞர் ஐயா சேலம் காளியப்ப கவுண்டர், இசைத்துறையில் சாதித்த மிருதங்கக் கலைஞர் ஐயா திருவாரூர் பக்தவத்சலம், சிலம்பாட்டத்தில் சிறப்பான பங்களிப்பு செய்துள்ள புதுச்சேரி சிலம்ப கலைஞர் ஐயா கே.பழனிவேலு, பொறியாளர் ஐயா காமகோடி, கலைத்துறையில் சாதித்த சகோதரிகள் காயத்ரி பாலசுப்ரமணியன், ரஞ்சனி பாலசுப்ரமணியன் அவர்களோடு, பத்மபூஷண் விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஐயா
களியப்பட்டி ராமசாமி, ஐயா பழனிசாமி, ஐயா மயிலானந்தன் மற்றும் மலையாள நடிகர் அன்புச்சகோதரர் மம்மூட்டி உள்ளிட்ட அனைவருக்கும் என்னுடைய நெஞ்சம் நிறைந்த அன்பும், நல்வாழ்த்துகளும்!



