முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

சமகால ஊடக ஆளுமைகளுக்கு முன்னத்தி ஏர்! செய்தி ஊடகத்துறையில் கனவுகளோடு…

0

சமகால ஊடக ஆளுமைகளுக்கு முன்னத்தி ஏர்!

செய்தி ஊடகத்துறையில் கனவுகளோடு கால் பதிக்கும் தமிழிளம் தலைமுறைக்கு ஆகச்சிறந்த வழிகாட்டி!

36 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் நிறைந்த மூத்த தமிழ் பத்திரிக்கையாளர்..!

சமரசமற்று உண்மையும், நேர்மையுமாக போராடும் ஊடகப்போராளி சகோதரர் பா.ஏகலைவன் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!

பணம், பதவி, அதிகாரத்திற்கு விலைபோகும் அவலம் பெருகி, ஊடகத்துறையில் நடுவுநிலைமை என்பதே கேள்விக்குறியாகியுள்ள தற்கால கொடுஞ்சூழலில், அவற்றுக்கெல்லாம் தம்மை ஒப்புக்கொடுக்காதும், ஏற்றுக்கொண்ட கொள்கையை அணுவளவும் விட்டுக்கொடுக்காதும், உண்மையின் பக்கம் நின்று மக்களாட்சியின் நான்காம் தூணான ஊடகத்துறையின் உன்னத அறத்தினை காத்திட போராடும் சகோதரர் பா.ஏகலைவன் அவர்களின் பெரும்பணியை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

அரசியல் அதிகார அச்சுறுத்தல்களையும், மிரட்டல்களையும் எதிர்கொண்டபோதும், அவற்றுக்கெல்லாம் அஞ்சாமல், நெஞ்சுரத்துடன் தமிழ்த்தேசிய அரசியலை வலுப்படுத்த துணைநிற்கும் அவருடைய உழைப்பும், ஒப்புடைப்பும் மிகுந்த போற்றுதலுக்குரியது.

இராவணா வலையொளியின் நிறுவனர், என் அன்புச்சகோதரர், ஐயா பா.ஏகலைவன் அவர்கள் நல்ல உடல் நலத்துடனும், உள்ள உறுதியுடனும் வாழ்வில் எல்லா நலன்களும், வளங்களும் பெற்று நலமுடன் வாழவும், ஊடக அறப்பணி சிறக்கவும் என்னுடைய அன்பும், வாழ்த்துகளும்!

@eagalaivanp

முந்தைய செய்திஎம்முயிர்த் தமிழ் காக்க; தம்முயிர் ஈந்த ஈகியரின் நினைவைப் போற்றும்…
அடுத்த செய்திதிரைத்துறையில் சாதனை புரிந்தமைக்காக இந்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ…