முதலாம் மொழிப்போரை முன்னின்று நடத்தி சிறை சென்ற முதன்மைப் போராளி..!
ஐயா ஈ.வே.ரா புகுத்திய திராவிட திரிபுவாதத்திற்கு எதிராக தமிழ்த்தேசிய அரசியல் காக்க ‘தமிழர் கழகம்’ கண்ட தன்மானத்தமிழர்..!
‘தமிழர் நாடு’ இதழ் நடத்தி தமிழ் மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்திய பெருந்தகை..!
தமிழர் மரபு திருமண இயக்கம் நடத்தி ஐயாயிரம் சாதி வேறுபாடற்ற தமிழ்த் திருமணங்களை நடத்தி வைத்த சமூகச் சீர்திருத்தவாதி..!
ஆலய நுழைவுப் போராட்டம் நடத்தி திருவானைக்காவல், மாயவரம் கோயில்களில் ஆதித்தமிழ்க்குடி மக்களை வழிபடச் செய்த பெருந்தமிழர்..!
தஞ்சையில் தமிழ்ப் பல்கலைக்கழகம் அமைந்திட அடிகோலிய தகைமையாளர்..!
தமிழகப் புலவர் குழுவினை நிறுவி அறிஞர் பலரை ஒருங்கிணைத்து தமிழ் வளர்த்த செம்மல்..!
35 க்கும் மேற்பட்ட அருந்தமிழ் நூல்கள் பல இயற்றி தமிழன்னைக்கு அணி சேர்த்த தமிழறிஞர்..!
தம்முடைய எழுத்து, சொல், செயல் யாவற்றையும் தமிழுக்கும், தமிழர் நலனுக்கும் ஒப்புவித்து, வாழ்வின் இறுதிநாள் வரை தமிழ்த்தேசியராகவே வாழ்ந்து மறைந்த, நம்முடைய தாத்தா முத்தமிழ் காவலர்
கி.ஆ. பெ. விசுவநாதம் அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்!



