நாம் தமிழர் கட்சி – விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதி, 128வது மாவட்டத் தலைவர் ஜெகநாதன் அவர்களின் இளையமகன் அன்புத்தம்பி ஜெ.அன்பரசன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன்.
அன்புத்தம்பியை இழந்து வாடும் ஜெகநாதன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், உறவுகளுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, அவர்களின் துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
தம்பி ஜெ.அன்பரசன் அவர்களுக்கு
என் கண்ணீர் வணக்கம்!



