எழுத்தாளர், பேச்சாளர், ஆவணப்பட இயக்குநர், ஆசிரியர் என்று பன்முகத்திறன் கொண்ட படைப்பாளி, சுற்றுச்சூழல் பேரறிஞர் பெருமதிப்பிற்குரிய ஐயா கோவை சதாசிவம் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
பின்னல் நகரம், ஊர்ப்புறத்துப் பறவைகள், உயிர்ப்புதையல், இறகுதிர்காலம், காலம் நடந்த பெருவழி, காலநிலை மாநாடு – பேச மறந்தவை, நாட்டு விலங்குகள், குறுநரிகள் வாழ்ந்த காடு, பறவையின் எச்சத்தில் பூக்குமொரு காடு, இப்படிக்கு மரம் உள்ளிட்ட பற்பல நூல்களை இயற்றி சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை தமிழ்ச்சமூகத்தில் ஏற்படுத்திய பெருந்தகை!
நாம் வாழும் சுற்றுச்சூழலின் முக்கியத்துவம் குறித்தும், அது சீர்கெடுவதால் ஏற்படும் பேராபத்துகள் குறித்தும், பல்லுயிர்கள் அழிவால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் எளிய தமிழில் ஐயா எழுதியுள்ள நூல்கள் யாவும் பாமர மக்களும் படித்து பயன்பெறும் சூழலியல் அறிவுக்கருவூலங்களாகும்.
சுற்றுச்சூழல் பேரறிஞர் ஐயா கோவை சதாசிவம் அவர்கள் இன்னும் பல ஆண்டுகள் நலமோடு வாழ்ந்து, தமிழ் மண்ணிற்கும் மக்களுக்கும் பெருந்தொண்டு புரிந்திட என்னுடைய அன்பும், வாழ்த்துகளும்!



