நாம் தமிழர் கட்சி – விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி முழுக்கோடு ஊராட்சியைச் சேர்ந்த அன்புத்தங்கை ஷாலினி அவர்களின் கணவர் அன்புத்தம்பி அஜில்குமார் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
அன்புத்தம்பி அஜில்குமார் அவர்களை இழந்து வாடும் அன்புத்தங்கை ஷாலினி அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, பெருந்துயரில் பங்கெடுக்கின்றேன்.
அன்புத்தம்பி அஜில்குமார் அவர்களுக்கு
என்னுடைய கண்ணீர் வணக்கம்!



