சமூகநீதிப் போராளி, நமது தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் அவர்களின் 166ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி, நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 07-07-2025 அன்று சென்னை கிண்டியில் உள்ள அண்ணல் காந்தி மண்டபத்தில் அமைந்துள்ள தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் அவர்களின் நினைவிடத்தில் மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, அதே இடத்திலேயே ‘புரட்சித் தமிழகம் கட்சி’ சார்பாக முன்னெடுக்கப்படவிருக்கும் கையெழுத்து இயக்கத்தையும் தொடங்கிவைத்தார்.