முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை பகுதியில் மிகக் குறைந்த கட்டணத்தில் மக்களுக்கு…

0

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை பகுதியில் மிகக் குறைந்த கட்டணத்தில் மக்களுக்கு மருத்துவச் சேவையாற்றிய மனிதநேய மருத்துவர் ஐயா இரத்தினம் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து பெருந்துயரமடைந்தேன். ஐயாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

மருத்துவம் என்பது மகத்தான சேவை; அது எம்மக்களுக்குத் தேவை எனும் உயர்ந்த நோக்கோடு, மக்கள் சேவையாற்றி, 'பத்து ரூபாய் டாக்டர்' என அன்பொழுக மக்களால் அழைக்கப்பட்ட ஐயா இரத்தினம் அவர்கள் மறைந்தாலும், மக்கள் மனங்களில் என்றென்றும் வாழ்ந்து கொண்டுதானிருப்பார்.

ஐயா இரத்தினம் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – சேலம் மாவட்டத்தில் புதிய கட்டமைப்பு நிறைவுறாத சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த பொறுப்பாளர்களுடன் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் சந்திப்பு மற்றும் கலந்துரையாடல்
அடுத்த செய்திதிருத்தணி அரசு மருத்துவமனை, மக்கள் பயன்படுத்தும் வகையில் செயல்படப்போவது எப்போது?…