மலேசியா நாட்டில் அமைந்துள்ள தமிழ் பள்ளிகளின் வளர்ச்சிக்காகவும், அங்கு வாழும் தமிழ் மக்களின் மேம்பாட்டிற்காகவும் தம் வாழ்நாள் முழுதும் அரும்பாடாற்றிய அம்மா சாந்தலட்சுமி பெருமாள் அவர்கள், மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
அம்மா சாந்தலட்சுமி அவர்கள் தம் கணவரோடு இணைந்து மலேசிய நாட்டிலிருந்துகொண்டே
தமிழீழத்தாயக விடுதலைப் போராட்டத்திற்கு தங்களால் இயன்ற உதவிகளை புரிந்த போற்றுதற்குரிய இனப்பற்றாளர்.
ஈழத்தாயகம் சென்று தமிழ்த்தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களை நேரடியாக சந்தித்த பெருமைக்குரியவர்.
அம்மா சாந்தலட்சுமி பெருமாள் அவர்களின் மறைவால் துயருற்றுள்ள, அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், மலேசியா வாழ் தமிழ்ச்சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அம்மா சாந்தலட்சுமி பெருமாள் அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்!



