முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

‘தாழக்கிடப்பாரைத் தற்காப்பதே தர்மம்!’ என முழங்கி, ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகப்…

0

'தாழக்கிடப்பாரைத் தற்காப்பதே தர்மம்!' என முழங்கி, ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகப் போராடிய மெய்யியல் புரட்சியாளர் ஐயா வைகுண்டரின் வழியில் அருந்தொண்டாற்றி வரும் சுவாமிதோப்பு அன்பு வனத்தின் தலைமைப்பதி பெருமதிப்பிற்குரிய ஐயா பால பிரஜாபதி அடிகளாரின் வாழ்விணையர் அம்மா இரமணிபாய் அவர்கள் மறைவெய்திய துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.

உற்ற துணையை இழந்துவாடும் ஐயா பாலபிரஜாபதி அடிகளாருக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் மற்றும் ஐயா வைகுண்டர் அன்பு வனத்தின் அடியார்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

அம்மா இரமணிபாய் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திகனமழையால் பாதிக்கப்பட்ட காவிரிப்படுகை மாவட்டங்களைப் பேரிடர் பாதிப்பு மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும்; விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50,000 இழப்பீடு வழங்கி, பயிர்க்கடன்களை முற்றிலுமாகத் தள்ளுபடி செய்ய வேண்டும்! -சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திஅரசு மருத்துவர் நியமனத் தேர்வில் ஊழல் புகார்; மருத்துவர் தகுதித்…