நாம் தமிழர் கட்சி – செங்ககல்பட்டு சட்டமன்றத் தொகுதி, நகரப் பொருளாளர் அன்புத்தம்பி மோகன் ராஜா அவர்களின் அம்மா விஜயா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.
அம்மா விஜயா அவர்களை இழந்து பெருந்துயரில் வாடும் மோகன் ராஜா, அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அம்மா விஜயா அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!



