காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரத்தில் அமைந்துள்ள ‘சாம்சங்’ தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள், எட்டு மணி நேர வேலை, ஊதிய உயர்வு, தொழிற்சங்க அங்கீகாரம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை நிறைவேற்றக்கோரி, கடந்த 32 நாட்களாக தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சாம்சங் பெருநிறுவனத்திற்கு ஆதரவாக நின்று போராட்டத்தை ஒடுக்கும் விதமாக, தொழிலாளர்களின் வீடுகளுக்குள் நள்ளிரவில் புகுந்து, தேடி தேடி அடித்து, சிறைப்படுத்தி, அவர்களின் குடும்பத்தினரை மிரட்டும் திராவிட மாடல் திமுக அரசின் கொடுங்கோன்மைச்செயலைக் கண்டிக்கும் விதமாகவும், சாம்சங் தொழிலாளர்களின் போராட்டக் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தும் விதமாகவும், இன்று 10-10-2024 நாம் தமிழர் கட்சியின் தொழிற்சங்கப் பேரவை நிர்வாகிகளுடன் நேரில் சென்று போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தொழிலாளர்களைச் சந்தித்து அவர்களது கோரிக்கைகளைக் கேட்டறிந்தபோது,
கண்டனவுரை https://t.co/v9BX23eJwc
செய்தியாளர் சந்திப்பு https://t.co/tLbv255ehs


