முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – பாளையங்கோட்டை தொகுதியின் தகவல் தொழில்நுட்பப்…

0

நாம் தமிழர் கட்சி – பாளையங்கோட்டை தொகுதியின் தகவல் தொழில்நுட்பப் பாசறைச் செயலாளர் அன்புத்தம்பி ஞானமுத்து மற்றும்
மகளிர் பாசறை துணைச் செயலாளர் அன்பத்தங்கை சங்கரி ஆகியோரின் தம்பி சவரிமணி அவர்கள் உயிரிழந்த
துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.

மண்ணுக்கும், மக்களுக்குமான மாற்று அரசியலை முன்னெடுக்கும்
நாம் தமிழர் கட்சி எனும் புரட்சிகர அரசியல் பெரும்படையில் இணைந்து, செயற்பட்டுவந்த அன்பத்தம்பி சவரிமணி அவர்களை இளவயதிலேயே இழந்திருப்பது மிகுந்த மனத்துயரத்தை அளிக்கிறது.

தம்பியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

அன்புத்தம்பி சவரிமணி அவர்களுக்கு
என் கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திபத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றி சமய ஆன்மீக உலகிலும் தமிழ்க் கவிதை…
அடுத்த செய்திசென்னை, மெரீனா கடற்கரையில் நடைபெற்ற வான்படை வீர தீர நிகழ்ச்சியில்…