நாம் தமிழர் கட்சி – மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆர்.வேலூர் ஊராட்சி கிளைப் பொறுப்பாளர் தம்பி நிசாந்த் அவர்கள் உயிரிழந்த துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
தமிழின நலன் மீது ஆர்வம் கொண்டு 2019 நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல்களில் களப்பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்ட தம்பி நிசாந்த் அவர்களின் இழப்பு எதனாலும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு.
தம்பி நிசாந்த் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அன்புத்தம்பி நிசாந்த் அவர்களுக்கு கண்ணீர் வணக்கம்!



