நாம் தமிழர் கட்சி – சேலம் மாவட்டம், ஓமலூர் சட்டமன்றத்தொகுதியைச் சேர்ந்த அன்புச்சகோதரர் அருள் நடராஜன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனத்துயருற்றேன்.
சகோதரர் அருள் அவர்கள் நாம் தமிழர் கட்சியின் துளி திட்டத்தில் தம்மை இணைத்துக்கொண்டு காலந்தவறாது தொடர்ச்சியாகப் பொருளாதாரப் பங்களிப்பைச் செய்து தமிழ்த்தேசிய அரசியலுக்கு வலுசேர்த்த பெருந்தகையாவார்.
கட்சிப் பொறுப்பென்று எதனையும் ஏற்காத போதிலும் பல ஆண்டுகளாக ஓமலூர் தொகுதியில் நிகழ்வுகள் பலவற்றுக்கு பேருதவி புரிந்த அவரது பெருங்குணம் மிகுந்த போற்றுதற்குரியது.
தம்மால் இயன்ற வழியில் இனமான அரசியலுக்குத் துணைநின்ற சகோதரர் அருள் அவர்களின் மறைவு தமிழ்த்தேசிய அரசியலுக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்.
சகோதரர் அருள் அவர்களின் மறைவால் துயருற்றுள்ள அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், நாம் தமிழர் கட்சி உறவுகளுக்கும் ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கிறேன்.
சகோதரர் அருள் நடராஜன் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!



