முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

ஆகச்சிறந்த நடிப்பாற்றலால் தமிழ்த்திரையின் தவிர்க்கவியலா தனித்துவமிக்க கலைஞனாக முத்திரைபதித்து வரும்…

0

ஆகச்சிறந்த நடிப்பாற்றலால் தமிழ்த்திரையின் தவிர்க்கவியலா தனித்துவமிக்க கலைஞனாக முத்திரைபதித்து வரும் ஆருயிர் இளவல் சூரி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!

@sooriofficial

தம்பி சூரி அவர்கள் திரைத்துறையில் தனது தொடக்க காலத்தில் நகைச்சுவை நடிப்பில் தமக்கென்று தனி பாணியை உருவாக்கி முத்திரைப் பதித்ததையும் தாண்டி, தற்போது தமிழ் மண்ணின் மரபுக் கூறுகளையும், வட்டார வழக்கையும், தம்முடைய உணர்வுப்பூர்வமான நடிப்புத்திறனால் வெளிப்படுத்தி, தமிழ் மண்ணின் தவிர்க்க முடியாத பெருங்கலைஞனாக உருவெடுத்துள்ளார்.

கிராமத்து வாழ்வியலையும், குறும்புகளையும் தமக்கே உரித்தான உடல்மொழியில் வெளிப்படுத்தும் அவரது கலைத்திறனும், கலைக்காக தம் உடலை வறுத்தி கடுமையான உழைப்பினைச் செலுத்துகின்ற அவருடைய ஈடு இணையற்ற அர்ப்பணிப்பும் தம்பி சூரி அவர்களுக்கு பெருவெற்றிகள் ஈட்டித்தந்து புகழின் உச்சியில் ஏற்றி வைக்கும் என்பது உறுதி.

நடிப்புத் திறமையிலும், தனிப்பட்ட குணத்திலும் தன்னை ஆகச்சிறந்தவராக நிரூபித்து இலட்சக்கணக்கான தமிழ் ரசிகர்களை ஈர்த்து, மக்களின் மனங்கவர்ந்த மண்ணின் கலைஞனாகத் தன்னை நிலைநிறுத்தியுள்ள அன்புத்தம்பி சூரி அவர்கள் கலைத்துறையில் மேலும் பல சாதனைகள் புரிந்திட அண்ணனின் அன்பும், வாழ்த்துகளும்!

முந்தைய செய்திநாம் தமிழர் கட்சி – சேலம் மாவட்டம், ஓமலூர் சட்டமன்றத்தொகுதியைச்…
அடுத்த செய்தி🔴தற்போது நேரலையில்..! https://t.co/FzegreQYzG நாம் தமிழர் கட்சி – ஒருங்கிணைந்த…