அவசர சிகிச்சைக்கு உதவிடுவோம்!
நாம் தமிழர் கட்சி – நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டைச் சேர்ந்த களப்பணியாளர், அன்புத்தம்பி பாலாஜி அவர்கள் கடந்த 31.07.2024 அன்று நாமக்கல்லில் நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று விட்டு வீடு திரும்பும்போது அவர் மீது மகிழுந்து மோதிய விபத்தில் சிக்குண்டு, கோவை மருத்துவ மைய மருத்துமனையில் (KMCH) அனுமதிக்கப்பட்டு, தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.
அன்புத்தம்பி திருச்செங்கோடு பாலாஜி பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவரது உயிர் காக்கும் மருத்துவச் செலவுகளுக்காக அவரது குடும்பத்தினர் கட்சி உறவுகளிடத்தில் உதவி கோரியுள்ளனர்.
உயிர்காக்கும் அவசர சிகிச்சைக்கு இதுவரையிலும் இரண்டு இலட்சம் ரூபாய்க்கும் மேல் செலவாகியுள்ளது எனவும், மேற்கொண்டு 3 இலட்சம் ரூபாய் வரை தேவைப்படுவதால், உலகெங்கும் பரவிவாழும் தாய்த்தமிழ் உறவுகளும், பொருளாதார வலிமைப்படைத்த நல்ல உள்ளங்களும், தங்களால் இயன்ற தொகையை கீழே கொடுக்கப்பட்டுள்ள தங்கை ரேவதி அவர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்தி உயிர்காக்க உதவிடுமாறு வேண்டுகிறேன்.
வங்கிக் கணக்கு விவரம்:
கணங்கின் பெயர் : ரேவதி.கே (Revathi.K)
வங்கி : தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி (Tamilnadu Mercantile Bank)
கணக்கு எண் : 366100050303147
IFSC code : TMBL0000366
தொடர்பு எண் : 9944925031



