முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

கர்நாடக தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் நிறுவனரும், தமிழ்த்தேசிய அரசியல் களச்…

0

கர்நாடக தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் நிறுவனரும், தமிழ்த்தேசிய அரசியல் களச் செயற்பாட்டாளருமான அன்பு சகோதரர் கோபி ஏகாம்பரம் அவர்களின் வாழ்விணையர், சகோதரி சகுந்தலா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பேரதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
தமிழர் உரிமைக்கும், அதன் மீட்சிக்குமான இன விடுதலை அரசியல் களத்தில் என் தோளோடு தோளாகத் துணைநிற்கும் சகோதரர் கோபி ஏகாம்பரம் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள இப்பேரிழப்பு எதன் பொருட்டும் ஈடுசெய்யவியலாதது.
உற்ற துணையை இழந்து வாடும் சகோதரர் கோபி ஏகாம்பரம் அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், கர்நாடக தமிழர் பாதுகாப்பு இயக்க உறவுகளுக்கும், எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
சகோதரி சகுந்தலா அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திஒரே இரத்தம்! அதே வீரம்! வீரமிகு எங்கள் பாட்டனார் தீரன்…
அடுத்த செய்திபேரன்பு கொண்டு நாங்கள் பெரிதும் நேசிக்கின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும்…