முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் வேளாண் சார்ந்த தொழில்களுக்குப் பயன்படுத்தப்படும்…

0

திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் வேளாண் சார்ந்த தொழில்களுக்குப் பயன்படுத்தப்படும் அருவாள், சுத்தியல், மண்வெட்டி போன்ற இரும்புக் கருவிகளைத் தயாரிக்கும் இரும்பு கொல்லர் தொழிலாளர்களை காவல்துறையினர் தொடர்ச்சியாக கைது செய்வதையும், விசாரணை என்ற பெயரில் அச்சுறுத்துவதையும் கண்டித்து தாங்கள் முன்னெடுத்துவரும் அறப்போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியின் ஆதரவு கோரி, தென்காசி மாவட்டம் பாவா நகரைச் சேர்ந்த இரும்பு கொல்லர் தொழிலாளர் உறவுகள் 01-09-2025 அன்று திருநெல்வேலியில் என்னை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

இரும்பு கொல்லர் தொழிலாளர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்து, அவர்களது வாழ்வாதாரப் பாதுகாப்புக்கான அறப்போராட்டம் வெல்ல நாம் தமிழர் கட்சி தோள் கொடுத்து துணைநிற்கும் என உறுதியளித்தேன்.

முந்தைய செய்திவீரப்பெரும்பாட்டன் பூலித்தேவன் அவர்களின் 310ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி 01-09-2025 அன்று…
அடுத்த செய்திதிருப்பூர் மாநகராட்சியின் குப்பைக் கழிவுகளைப் பாறைக்குழிகளில் கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து,…