நாம் தமிழர் கட்சி – உழவர் பாசறையின் திண்டுக்கல் மண்டலப் பொறுப்பாளர் அன்புத்தம்பி பொறியாளர் க.சரவணக்குமார் அவர்களின் தாயார் அம்மா சுலோச்சனா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.
ஆருயிர் அன்னையை இழந்து பெருந்துயரில் வாடும் அன்புத்தம்பி சரவணக்குமார் அவர்களுக்கும், மாநில மகளிர் பாசறைப் பொறுப்பாளர், அன்புத்தங்கை பொறியாளர் ப.நிரஞ்சனா அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அம்மா சுலோச்சனா அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!



