நாம் தமிழர் கட்சி – ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதிச் செயலாளர் அன்புத்தம்பி சோ.சதீஸ்குமார் அவர்களின் தந்தையார் மதிப்பிற்குரிய ஐயா கு.ம.சோமசுந்தரம் அவர்கள் மறைவெய்தினார் எனும் துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
பாசமிகு தந்தையை இழந்து வாடும் அன்புத்தம்பி சதீஸ்குமார் அவர்களுக்கும், அவரது இணையர் மகளிர் பாசறை தொகுதி துணைச் செயலாளர் அன்புத்தங்கை மதுமதி அவர்களுக்கும், குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா சோமசுந்தரம் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!



