நாம் தமிழர் கட்சியின் தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர் இரா.தமிழழகன் அவர்களுடைய தந்தையார் மதிப்பிற்குரிய
ஐயா ஆசிரியர் சி.இராமன் அவர்கள் மறைவெய்திய துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.
ஐயாவை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும்,நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா ஆசிரியர் சி.இராமன் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!



