முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

#நூல்_பரிந்துரை 02 #சூழலியல்_அரசியல்_பொருளியல் தமிழ்த்தேசிய அறிவாளுமை பெருமதிப்பிற்குரிய ஐயா கி.வெங்கட்ராமன்…

0

#நூல்_பரிந்துரை 02

#சூழலியல்_அரசியல்_பொருளியல்

தமிழ்த்தேசிய அறிவாளுமை பெருமதிப்பிற்குரிய ஐயா கி.வெங்கட்ராமன் அவர்கள், வளர்ச்சி என்ற பெயரில் இவ்வுலகம் எதிர்கொள்ளும், எதிர்கொள்ள இருக்கும் சூழலியல் பேரழிவுகளைப் பற்றியும், அதன் பின்னாலிருக்கும் அரசியல், பொருளியல் பற்றியும் தக்க தரவுகளோடு மிகச்சிறப்பாக இப்புத்தகத்தில் எழுதியுள்ளார்.

நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்ற இந்தப் பூமி மனிதர்களுக்கு மட்டுமானதல்ல; இது உலக உயிர்களின் உயிர் உடைமை. எல்லா இயற்கை வளங்களையும் அழித்துவிட்டு அடுத்த தலைமுறைக்கு எதை விட்டுச்செல்ல போகிறோம்..? பூமியும், இயற்கை வளங்களும் வாடகை வீடு போன்றது; அடுத்த தலைமுறைக்கு பாதுகாப்பாக விட்டுச்செல்ல வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை என்பதை ஆழமாக எடுத்துரைக்கிறது.

மண்ணையும் மக்களையும் நேசிக்கும் என் உயிர்க்கினிய தம்பி-தங்கைகள் மற்றும் பேரன்பிற்குரிய உறவுகள் அனைவரும் வாங்கிப் படிக்கவேண்டிய புத்தகமிது.

முந்தைய செய்திமிக்ஜாம் புயல் துயர்துடைப்புப் பணி: எண்ணூரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சீமான் உதவிப்பொருட்கள் வழங்கினார்!
அடுத்த செய்திநீலகிரி மாவட்டம் பந்தலூர் மலைப்பகுதியில் திரியும் ஆட்கொல்லி சிறுத்தையை விரைந்து…