மிக்ஜாம் புயல் மற்றும் சென்னை பெருவெள்ளத்தாலும், மழை வெள்ளத்தோடு தனியார் ஆலைகளில் இருந்து முறைகேடாக வெளியேற்றப்பட்ட கச்சா எண்ணெய்க் கழிவுகளாலும், எண்ணூர் கோரமண்டல் ஆலையில் அண்மையில் ஏற்பட்ட நச்சுக்காற்று கசிவினாலும், கடல் சார் சூழலியலில் ஏற்பட்ட சீர்கேட்டால் மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாலும் முற்றிலுமாக வாழ்வாதாரத்தை இழந்து கொடுந்துயரத்திற்கு உள்ளாகியுள்ள எண்ணூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மீனவ கிராம மக்களுக்கு, நாம் தமிழர் கட்சியின் சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள், காட்டுக்குப்பம் பகுதியில் 05-01-2024 அன்று துயர் துடைப்பு உதவிப்பொருட்கள் வழங்கி, நாம் தமிழர் கட்சியின் மருத்துவப் பாசறை சார்பாக சிறப்பு மருத்துவ முகாம்களைத் தொடங்கிவைத்து, கோரமண்டல் ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கக்கோரி தொடர் அறவழி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களோடு போராட்டக் கோரிக்கைகள் வெல்லும் வரை தானும் நாம் தமிழர் கட்சியும் தோளோடு தோளாக களத்தில் துணை நிற்போம் என்று உறுதியளித்தார்.
- தலைமைச் செய்திகள்
- மிக்ஜாம் புயல் துயர்துடைப்புப் பணிகள்
- போராட்டங்கள்
- மருத்துவப் பாசறை
- மக்கள் சந்திப்புகள்
- மக்கள் நலப் பணிகள்
- திருவொற்றியூர்