முக்கிய அறிவிப்பு: அரசு ரப்பர் தோட்டத் தொழிலாளர்கள் பணி நிரந்தரம் கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் (சனவரி 06, நாகர்கோவில்)

101

முக்கிய அறிவிப்பு:
அரசு ரப்பர் தோட்டத் தொழிலாளர்கள் பணி நிரந்தரம் கோரி
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

(சனவரி 06, நாகர்கோவில்)

அரசு ரப்பர் தோட்டத் தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்யக் கோரி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், வருகின்ற 06-01-2024 சனிக்கிழமையன்று மாலை 03 மணியளவில் நாகர்கோவில் வடசேரியில் அமைந்துள்ள அரசு ரப்பர் கழகம் அருகில், நாம் தமிழர் தொழிற்சங்கப் பேரவை – கன்னியாகுமரி மாவட்டம் சார்பாக, மாநில மற்றும் மாவட்ட தொழிற்சங்கப் பேரவைப் பொறுப்பாளர்கள் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது.

இம்மாபெரும் ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி உள்ளிட்ட அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு

முந்தைய செய்திபெருவெள்ளப் பாதிப்புகளைக் கருத்திற்கொண்டு பொறியியல் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வினை ஒத்திவைக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திஅரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி, வேலைநிறுத்தப் போராட்டத்தைக் கைவிடச் செய்து பொதுமக்கள் நலனைப் பாதுகாக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்