முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி – திருவொற்றியூர்…

0

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி – திருவொற்றியூர் தொகுதியின் குருதிக்கொடைப் பாசறை இணைச் செயலாளர் அன்புத்தம்பி க.ராஜசம்பந்தம் அவர்கள் மறைவுற்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.

அனைத்து உயிர்களுக்குமான அரசியலை முன்னெடுக்கும் நாம் தமிழர் கட்சி எனும் புரட்சிகர அரசியல் பெரும்படையில் இணைந்து, குருதிக்கொடை பாசறையின் மூலம் மக்களின் உயிர்காக்கும் உன்னதப் பணியாற்றிவந்த ஆகச்சிறந்த களப்போராளியை இளவயதிலேயே இழந்திருப்பது மிகுந்த மனத்துயரத்தைத் தருகிறது.

தம்பி ராஜசம்பந்தம் அவர்களை இழந்து வாடும் பெற்றோர்களுக்கும், குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும்,நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

அன்புத்தம்பி க.ராஜசம்பந்தம் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திமுக்கிய அறிவிப்பு: நச்சுக்காற்று கசிவால் மக்களைப் பேராபத்திற்கு உள்ளாக்கிய எண்ணூர் கோரமண்டல் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி போராடிவரும் மக்களுக்கு ஆதரவாக களத்தில் சீமான்!
அடுத்த செய்திஇந்திய நாட்டின் விடுதலைக்காக 29 முறை சிறைச்சென்ற வீரத்தியாகி! நமது…