முக்கிய அறிவிப்பு: நச்சுக்காற்று கசிவால் மக்களைப் பேராபத்திற்கு உள்ளாக்கிய எண்ணூர் கோரமண்டல் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி போராடிவரும் மக்களுக்கு ஆதரவாக களத்தில் சீமான்!

203

க.எண்: 2023120521
நாள்: 30.12.2023

முக்கிய அறிவிப்பு:

நச்சுக்காற்று கசிவால் மக்களைப் பேராபத்திற்கு உள்ளாக்கிய
எண்ணூர் கோரமண்டல் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி
போராடிவரும் மக்களுக்கு ஆதரவாக களத்தில் சீமான்!

எண்ணூர் கோரமண்டல் ஆலையில் இருந்து திடீரென நள்ளிரவில் வெளியேறிய நச்சுக்காற்று பரவியதால் அப்பகுதியில் இருந்த மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவசர அவசரமாக வெளியேறியதால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டாலும், பெரும்பாலான மக்கள் இன்னும் அந்தப் பாதிப்பிலிருந்தும், அச்சத்திலிருந்தும் மீண்டுவர இயலாமல் தவிக்கின்றனர்.

இதைவிட பெரும் விபத்துகள் ஏற்பட்டால் எவ்வளவு பெரிய பேரழிவை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சத்தால் எண்ணூர் மக்கள் வீதிக்கு வந்து, கோரமண்டல் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த ஒரு வாரமாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மண்ணையும் மக்களையும் காக்கும் நம் மக்களின் போராட்டத்திற்கு வலிமை சேர்க்கும்விதமாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள்,
நாளை 31-12-2023 காலை 10 மணியளவில் எண்ணூர் பெரிய குப்பம் பகுதிக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டு, போராடிவரும் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கவிருக்கிறார்.

உடன், கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு