நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் அன்பிற்குரிய சகோதரி ஆன்றனி ஆஸ்லின் அவர்களின் பாசத்திற்குரிய தாயார் ராஜேஷ்மேரி அம்மையார் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த துயரமடைந்தேன்.
பெற்றெடுத்துப் பேணி வளர்த்த அன்பு அன்னையை இழந்து தவிக்கும் சகோதரி ஆன்றனி ஆஸ்லின் அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அம்மா ராஜேஷ்மேரி அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!


