முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

‘மண்’ என்ற பெயரில் என் மீது ஆசை வைப்பவனைப் பழிப்பதும்…

1

‘மண்’ என்ற பெயரில் என் மீது ஆசை வைப்பவனைப் பழிப்பதும் நீங்கள்தான்.

நாடென்ற பெயரில் ஆசை வைத்தால் ‘பற்று’ என்று பாராட்டுவதும் நீங்கள்தான்.

நான் மலடில்லை. என்னை யாரேனும் மலடி என்றால், அவர்கள் ஆண்மையைத்தான் சந்தேகிப்பேன்.

உழைக்காமல் இல்லை என்கிறார் சிலர். அவர்களைக் கண்டு சிரிக்கிறேன்!

உழைத்தும் இல்லை என்கிறார் சிலர். அவர்களைக் கண்டு அழுகிறேன்!

என்னை ஆள விரும்புகிறவனை நான் வெறுக்கிறேன்.

என்னில் ஆக்க விரும்புகிறவனை நான் காதலிக்கிறேன்.

நீங்கள் என்னைக் காலால் மிதிக்கிறபோது பெருமை அடைகிறேன்.

ஆனால் என்னில் பிச்சை பாத்திரம் செய்து, கையில் ஏந்துகிறபோது நான் அவமானப்படுகிறேன்.

நீங்கள் என்னைக் கீறுகிறீர்கள். நான் சோறு தருகிறேன்!

என்னைக் காயப்படுத்துகிறீர்கள். நான் பாலூட்டுகிறேன்!

பெண்களுக்குப் பொறுமை குணம் வந்தது ‘மசக்கை’ நேரத்தில் என்னைத் தின்றதால்தான்.

நீங்களும் நானும் வேறல்ல. காலக்குயவன் என்னைப் பிசைந்து, பரிணாமச் சக்கரத்தில் வனைந்த பாத்திரங்கள்தான் நீங்கள்!

– கவிக்கோ அப்துல் ரகுமான்

முந்தைய செய்திமுதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி -…
அடுத்த செய்திதமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் அவர்களின் 16ஆம் ஆண்டு…