நன்றாகப் பழுக்கக் காய்ச்சிய இரும்பு ஒன்றை எடுத்துக்கொள்ளுங்கள். அதை ஒரு பலகைக்குள் செலுத்தப்பாருங்கள். அதில் கூர்மை இருக்க வேண்டாம், அது நுழைந்து விடும். ஆனால் எவ்வளவுதான் கூர்மையாக உள்ள ஒரு இரும்பு, நெருப்பில் பழுக்கக் காய்ச்சப்படாதது, அதே மரப்பலகைக்குள் நுழைக்க முயற்சித்தால், அது நுழையாது. ஆழ்ந்த மற்றும் உண்மையான ஈடுபாடு ஒன்றினாலேயே எதுவும் பெறப்படுகிறது என்கிறார் சால்வினி.
நீங்கள் சொல்லும் கருத்தில், உங்களுக்கு ஆழ்ந்த நம்பிக்கை இருப்பதைப் பிறருக்குப் புலப்படுத்தினால், உங்களிடம் வேறு பல குறைகள் இருந்தாலும் அதைக் கருத்தில்கொள்ள மாட்டார்கள்.
எல்லாவற்றிற்கும் மேலாகப் படியுங்கள், கற்று அறியுங்கள், உங்களைத் தெளிவாக்கிக்கொள்ளுங்கள். கடுமையான முயற்சி ஒன்றைப் பின்னணியாகக் கொள்ளாத ஒரு மாணவனாக நீங்கள் ஆகும் வரையில், பிறரது அறிவு உங்களுக்கு உதவி செய்ய வராது. உற்சாகமே எண்ணங்களுக்கு வலிமை கொடுக்கிறது.
– ஆரிசன் ஸ்வெட் மார்டன்


