முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தன்னந்தனியே எவனொருவன் நிற்கத் துணிகிறானோ, அவனே உலகில் வலிமை மிக்க…

0

தன்னந்தனியே எவனொருவன் நிற்கத் துணிகிறானோ, அவனே உலகில் வலிமை மிக்க மனிதன்!
– ஹென்றி கீப்சன்

தைரியமே பிறவிக் குணமாய் அமைந்துள்ள ஒருவன், எவ்வளவு கேவலமான நிலையை அடைந்தாலும், அந்தத் தைரியக்குணத்தை மாத்திரம் அழிக்கவே முடியாது. நெருப்பைத் தலைகீழாகப் பிடித்தாலும் அதன் சுடர் ஒருகாலும் கீழ்நோக்கி எறிவதில்லை!
– பத்ரு ஹரி

நம்முடைய தகுதியினால் நாம் பிரகாசிக்க வேண்டும். நாம் செய்யும் செயல்களால் உலகத்தார் நம்மைத் தெரிந்துகொள்ள வேண்டும். நம் சொந்த முயற்சிகளால் நாம் முன்னுக்கு வந்து நம் பெருமையை உலகத்திற்குக் காட்ட வேண்டும்.

ஒருவன் தன்தகுதியை வெளிப்படுத்தும் ஆற்றல் பெறும்வரை, அவனுக்கு மதிப்பும் பெருமிதமும் பெருமையும் ஏற்படாது!
– காந்தியடிகள்

உழைப்பிலேயே தன் பிழைப்பைத் தேடிக்கொண்டு, பிறரிடம் கைநீட்டுவதில்லை என்று இருப்பவனிடம் இறைவனுக்கு அன்பு அதிகம்!
– நபிகள் நாயகம்

வெற்றிபெற வேண்டும் என்னும் உங்களுடைய திடமான, நம்பிக்கையான எண்ணம்தான் வேறு எந்த ஒரு காரியத்தையும்விட மிக முக்கியமானது!
– ஆபிரகாம் லிங்கன்.

முந்தைய செய்திமக்கள் சந்திப்பு | பாதிக்கப்பட்ட சென்னை அனகாபுத்தூர் மக்களுக்கு சீமான் நேரில் ஆதரவு!
அடுத்த செய்திதமிழ்த் திரைக்கலையின் தன்னிகரில்லா தனிப்பெருங்கலைஞன்! எவ்வேடம் ஏற்றாலும் அதில் தமது…