முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி – கமுதி வடக்கு ஒன்றியச் செயலாளர் அன்புத்தம்பி சே.செயசீலன் அவர்களது சகோதரர் சே.ஜஸ்டின் அவர்கள் அவர்கள் மறைவெய்தினார் எனும் துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
சகோதரரை இழந்து வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
சகோதரர் சே.ஜஸ்டின் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!


