முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

மனித வாழ்க்கை என்பது எண்ணுதற்கரிய பல திருப்பங்களைக் கொண்ட ஆறு….

1

மனித வாழ்க்கை என்பது எண்ணுதற்கரிய பல திருப்பங்களைக் கொண்ட ஆறு.
ஒவ்வொரு நல்ல செயலும், நல்ல எண்ணமும் முகத்தில் ஒரு அழகை, ஒளியைத் தருகிறது!
– ரஸ்கின்

வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு,
சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை!
– சாமுவேல் பட்லர்

நீங்கள் அனைவரும் மகத்தான காரியங்களைச் சாதிப்பதற்காகப் பிறந்தவர்கள் என்று நம்புங்கள்! – வீரத்துறவி விவேகானந்தர்

சிந்தனையும், செயலும் ஒன்றாகிவிட்டால் வாழ்க்கையில் வெற்றியை எளிதில் பெற்றுவிடலாம்!
– இராமதாசர்

இனிமையான சொற்களை மிகவும் குறைவான விலைக்கு வாங்கலாம். ஆனால், அவற்றின் மதிப்போ மிகமிக அதிகம்.

நல்லதைப் பெறுபவன் அதை ஒரு நாளும் மறக்கக்கூடாது! நல்லதைச் செய்பவனோ ஒருநாளும் அதை நினைவில் வைத்துக்கொள்ளக்கூடாது!
– சர்ரோல்

எதிர்காலத்தை எண்ணி அஞ்சாதவனே, நிகழ்காலத்தை நுகரலாம்.
இறப்பதற்கு அஞ்சுபவன் வாழ்வதில்லை!
– சைரஸ்

முந்தைய செய்திநிலமும் வளமும் சார்ந்த தொழிற்சாலைகள் – நாமக்கல்லில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை
அடுத்த செய்திவாடகை வாகன ஓட்டுநர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் முன்பதிவு செயலியை…