இராணிப்பேட்டை தொகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் ஆற்காடு மேற்கு ஒன்றியத் தலைவர் அன்புத்தம்பி ப.பூபாலன் அவர்களின் தம்பி ப.முருகன் அவர்கள் உயிரிழந்த துயரச் செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன்.
ஈடுசெய்யவியலா பேரிழப்பினால் வாடும் தம்பியின் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அன்புத்தம்பி ப. முருகன் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!
– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி


