தங்கவயல் நாம்தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பாசறை – மொழிப்போர் ஈகியர் வீரவணக்கம்

27
07.7.23 வெள்ளிக்கிழமை அன்று தங்கவயல் நாம்தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பாசறையின் முன்னெடுப்பில். 1982 ஆம் ஆண்டு கருநாடக மாநிலத்தில் உள்ள கோலார் தங்கவயலில் தாய்மொழி கல்வியை காக்க பேரெழுச்சியாக நடந்த போராட்டத்தில் உயிர்நீத்த மொழிப்போர் ஈகியர்களான மோகன்,பரமேசு, பால்ராசு,உதயகுமார் ஆகிய மொழிப்போர் ஈகியர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும்வகையில் நினைவேந்தல் நிகழ்வானது ஏற்பாடு செய்யப்பட்டது.
முதலில் காலை 10. மணியளவில் டி. வட்டம், மற்றும் கில்பர்ட்சு வட்டத்தில் உள்ள மாணவச்செல்வங்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கி தாய்மொழிக்கல்வியின் அவசியத்தை விளக்கி சிறப்புரையாற்றி மொழிப்போர் ஈகியர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது,
தொடர்ந்து பிற்பகல் 3.00. மணியளவில் கோரமண்டல் பகுதியிலுள்ள தங்கவயல் சமுதாய கல்லூரியில் உள்ள மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கி தாய்மொழிக்கல்வியின் அவசியம் மற்றும் மொழிப்போர் ஈகியரின் தியாகத்தை போற்றி , நிகழ்வுக்கு வந்திருந்த சிறப்பு அழைப்பாளர்கள் சிறப்புரையாற்றினர்,
இந்நிகழ்வில் நாம்தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஐயா வெற்றிசீலன் அவர்கள் தலைமை வகித்து எழுச்சியுரையாற்ற, தங்கவயல் நாம்தமிழர் கலைஇலக்கிய பண்பாட்டு பாசறையின் செயலாளர் ஐயா ம.பிரதாப்குமார், அருட்சகோதரி.ஸ்டெல்லா ஆகியோரின் சிறப்புரையுடன் ஒருங்கிணைப்பாளர் ஆகுஸ்டின் நன்றியுரையுடன் நினைவேந்தல் நிகழ்வானது நிறைவுற்றது.