அறிவிப்பு: தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்தக்கோரி நாம் தமிழர் மகளிர் பாசறை முன்னெடுக்கும் நாற்பது மாவட்டங்களிலும், ஒரே நாளில், ஒரே நேரத்தில் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கும் நிகழ்வு

459

க.எண்: 2023060229
நாள்: 05.06.2023

அறிவிப்பு:

தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்தக்கோரி
நாம் தமிழர் மகளிர் பாசறை முன்னெடுக்கும்

நாற்பது மாவட்டங்களிலும், ஒரே நாளில், ஒரே நேரத்தில்
மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கும் நிகழ்வு

     தமிழகத்தில் மதுவிலக்கை முழுமையாக நடைமுறைப்படுத்துவோம் என்று வாக்குறுதியளித்து, ஆட்சிக்கு வந்தபிறகு தமிழகம் முழுவதும் மதுக்கடைகளின் எண்ணிக்கையை பன்மடங்காக உயர்த்தி, தெருவுக்குத் தெரு ஒரு குடிப்பகத்தைத் திறந்துவைத்து, ஆண்கள்-பெண்கள், சிறுவர்கள்-பெரியவர்கள் என அனைத்துத் தரப்பினரையும் மதுபோதைக்கு அடிமையாக மாற்றி கொடுஞ்சாதனை படைத்துள்ள ‘திராவிட மாடல்’ திமுக அரசிடம், தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை உடனடியாக நடைமுறைப்படுத்த வலியுறுத்தும் பரப்புரைக்கு ஆதரவாக பொதுமக்களிடம் கையெழுத்து பெற்று, அதனை வருகின்ற 12-06-2023 அன்று நாற்பது மாவட்டங்களிலும், நாம் தமிழர் மகளிர் பாசறை சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கும் போராட்டத்தை முன்னெடுக்கவிருக்கின்றனர்.

தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் நடைபெறும் இம்மாபெரும் போராட்டத்தில், கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி உள்ளிட்ட அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும் பொதுமக்களும் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு

முந்தைய செய்திதமிழிளம் தலைமுறையை முழுவதுமாக பலி கொடுக்கும் முன்பாக தமிழ்நாடு அரசு மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திகிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளியில் வேளாண் நிலங்களைப் பறித்துத் தொழிற்பூங்கா அமைக்கும் முடிவை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்