சுற்றுச்சூழல் பாதுகாப்பு களப்பணியாளர்கள் கவனத்திற்கு | நாம் தமிழர் கட்சி

1087

க.எண்: 2019060128

நாள்: 19.07.2019

சுற்றுச்சூழல் பாதுகாப்பு களப்பணியாளர்கள் கவனத்திற்கு

அன்பிற்கினிய உறவுகளுக்கு வணக்கம்..!

நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பாகவும் கட்சியினூடாகவும் நம் வனங்களையும் வளங்களையும் பேணிக்காக்க நாம் சூழலியல் முன்னெடுப்புகளைச் செய்து வருவது அனைவரும் அறிந்ததே. எல்லோராலும் எளிதாக எண்ணிப்பார்க்க முடியாத களப்பணிகளை அசாத்தியமாக கையிலெடுத்து செய்து முடிக்கும் திறன் படைத்த கள வீரர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய சில குறிப்புகள் இங்கு கொடுக்கப்படடுள்ளன. அவற்றை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டுமென சுற்றுச்சூழல் பாசறை சார்பாக அறிவுறுத்தப்படுகிறது.

  1. எந்தவொரு களப்பணியையும் முறையான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் முன்னெடுத்தலை தவிர்க்க வேண்டும்.
  2. மரம் நடுதல்/களையெடுத்தல்/ தூர்வாருதல்/துப்புரவு பணி போன்ற எதுவானாலும் கையுறைகள், முகமூடி, தகுந்த காலணி ஆகியவற்றை அணிந்திருத்தல் மிகவும் அவசியம்.
  3. பல நேரங்களில் தூர்ந்த நீர்நிலைகளையும் கழிவுகளையும் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட நேரிடும்; அத்தகைய சூழலில் முகமூடி, கையுறைகள் போன்ற முறையான பாதுகாப்பு சாதனங்களின்றி இயங்குதலை தவிர்க்க வேண்டும்.
  4. பல சமயங்களில் நச்சு வாயு தாக்குதல், நச்சு பூச்சிகள் கடித்தல் போன்ற ஆபத்துகளை நாம் கண்டும் கேட்டும் இருக்கிறோம். அவற்றிலிருந்து தன்னையும் சுற்றத்தாரையும் எப்பொழுதும் பாதுகாப்பாக வைத்திருக்க தன்முனைப்போடு இருக்க வேண்டும்.
  5. மிக முக்கியமாக 18 வயதுக்கு கீழுள்ளவர்கள் களப்பணிகளில் ஈடுபடுத்தப்படுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

ஐம்பது ஆண்டுகால அரசியல் கட்சிகள் செய்யத் துவங்காத ஒன்றை செய்யத்துணிந்து களமிறங்கி நிற்கும் களப்பணியாளர்களே கட்சியின் மிகச்சிறந்த போர் வீரர்கள். இயற்கையை காப்பாற்றியாக வேண்டிய பெரும்பணியிலிருப்பதால் அதற்கு தகுதியுள்ளவர்களாக தன்னை மாற்றி நிறுத்திக்கொள்ள, பாதுகாப்பாக இருக்கவேண்டிய அவசியம் உணர்ந்து அக்கறையுடன் நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை மேற்கண்டவற்றை கேட்டுக்கொள்கிறது.

சுற்றுச்சூழல் பாசறை
வஜ்ரவேல்: 8940616969 | விஜயராகவன்: 8939818797 | வெண்ணிலா: 9884323380 | சுனந்தா: 9910385001

முந்தைய செய்திஅழகுமுத்துகோன் மற்றும் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு-கீழ்ப்பென்னாதுர்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | நாம் தமிழர் அமெரிக்கா