பூவிருந்தவல்லி தொகுதி சார்பாக மேப்பூர் தாங்கல் பகுதியில் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு (23-04-2023) அன்று 40 அடி உயர கம்பத்தில் மாநில செய்தி தொடர்பாளர் பாக்கியராஜன் அவர்கள் புலிக்கொடியேற்றி வைத்தார்.அதனை தொடர்ந்து பள்ளி குழந்தைகள் நோட்டுப் புத்தகமும் பொது மக்களுக்கு உணவு,நீர் மோர்,தர்பூசணி பழம் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.இந்நிகழ்வில் மாவட்ட, தொகுதி,ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் நாம் தமிழர் உறவுகள் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.