அமெரிக்க விண்வெளி நிறுவனம் NSS நடத்திய விண்வெளி அறிவியல் போட்டியில் ஐந்தாமிடம் பிடித்து வெற்றி பெற்றுள்ள அன்புமகன் அர்ச்சிகன் அவர்களுக்கு அன்பும், பாராட்டுகளும்! – சீமான் பெருமிதம்

174

ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் விஜேந்திரகுமார் – மேனகா இணையரின் அன்புமகன் அர்ச்சிகன் அமெரிக்க விண்வெளி நிறுவனமான National Space Society (NSS) பன்னாட்டு மாணவர்களுக்கிடையே நடத்திய விண்வெளி அறிவியல் போட்டியில் 5ஆவது இடம் பிடித்து வெற்றி பெற்றுள்ள செய்தியறிந்து பெருமிதமும், மகிழ்ச்சியும் அடைந்தேன்.

உலகின் 19 நாடுகளிலிருந்து 26725 மாணவர்கள் பங்கேற்ற நிலையில், அவற்றில் விண்வெளியில் மனிதர்களைக் குடியமர்த்தும்போது பின்பற்ற வேண்டிய அறிவுசார் நுட்பங்கள் குறித்து அர்ச்சிகன் அளித்த செயற்திட்டத்தை NATIONAL SPACE SOCIETY (NSS) அங்கீகரித்துள்ளது உலகத்தமிழர்கள் அனைவருக்கும் பெருமை அளிக்கக் கூடியதாகும்.

இலங்கை அரசால் இனவழிப்புக்கு உள்ளாகி மண்ணையும், மக்களையும், உறவுகளையும், உடைமைகளையும் இழந்து விடுதலைப்போரின் வலி சுமந்து, ஈழத்தாயகத்திலிருந்து பெற்றோருடன் தமிழ்நாட்டில் ஏதிலியாக வாழ்ந்துவரும் நெருக்கடிமிகு நிலையிலும், கிடைக்கப்பெற்ற மிகச்சொற்ப வாய்ப்பினைப் பயன்படுத்தி, தமது அயராத முயற்சியினாலும், அபாரத் திறமையினாலும் தமிழினத்தைத் தலைநிமிரச் செய்துள்ளதோடு, தன் இனத்தை அடிமைப்படுத்திய இலங்கை நாட்டிற்கும் சேர்த்து பெருமை சேர்த்துள்ள அன்புமகன் அன்புமகன் அர்ச்சிகனுக்கு எனது அன்பையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்!

கடுமையான உழைப்பும், தளராத மன ஊக்கமும் இருந்தால் எத்தகைய சூழலிலும் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்து, புலம் பெயர்ந்து வாழும் தமிழ்ப் பிள்ளைகளுக்கு முன்னுதாரணமாகத் திகழும் அன்புமகன் அர்ச்சிகனுக்கு நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்!

அரைநூற்றாண்டுகால விடுதலைபோரில் ஏற்பட்ட பின்னடைவு, நூற்றாண்டின் மிகப்பெரிய இனப்படுகொலை, பன்னாட்டு அரங்கில் நீதிகோரும் நெடிய போராட்டம், ஈழத்தில் இன்றும் தொடர்கின்ற இனவழிப்பு கொடுமைகள், புலம்பெயர் நாடுகளில் எதிர்கொள்கின்ற துயரங்கள் என்று சோதனைகளும், வேதனைகளும் நிறைந்த தமிழினத்தின் நம்பிக்கை துளிர்களாக இருப்பவர்கள் தலைமுறைதாண்டி எழுந்துவரும் இளம் தமிழ்ப்பிள்ளைகளே. கடல் கடந்து, கரைசேர்ந்த இடங்களில் எல்லாம் விதையாய் விழுந்தோம்! அன்புமகன் அர்ச்சிகன் போன்று எம்மினப் பிள்ளைகள் தடைகளைத் தகர்த்து, தங்கள் அறிவாலும், ஆற்றலாலும் விருட்சமாக உயரும் நாளில் உறுதியாக எம் இனம் வெல்லும்!

வீறுகொண்டு எழுவோம்! வெற்றிகண்டு மகிழ்வோம்! எங்கள் இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை! இனம் ஒன்றாவோம்! இலக்கை வென்றாவோம்! நாம் தமிழர்!

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

Congrats, Archchihan for Winning the Fifth Prize in the Space Settlement Contest conducted by the NSS!

I am proud and happy to learn that Archchihan, son of Vijendra Kumar and Menaka, who migrated from Tamil Eelam and are living in Tamil Nadu, has won 5th prize in the Gerard K. O’Neill Space Settlement Contest conducted by the U.S. space agency, the National Space Society (NSS), at the international level.

It is a matter of great pride for all Tamils of the world that 26,725 students from 19 countries of the world participated in them and that the NSS has recognized Archchihan’s project on the intellectual techniques to be followed when humans settle in space.

I express my love and appreciation to Archchihan, who has seized the smallest opportunity to showcase his brilliance and made not only the Tamil race stand tall but also made Sri Lanka that treated Tamils has slaves with his untiring efforts and extraordinary skills, bearing the brunt of the decades-long war, having suffered genocide perpetrated by Sri Lanka and losing the land, loved ones, and possessions, and living in Tamil Nadu with his parents, far away from the Tamil Eelam motherland.

My heartiest congratulations to Archchihan, who has proved that anything can be achieved under any hardship with hard work and untiring self-motivation and has set an example for the Tamils living in exile.

On the day when our children break down the barriers and rise to new heights with their knowledge and skills, like Archchihan, our race will surely triumph.

முந்தைய செய்தி2000க்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினர் நாம் தமிழரில் இணைந்த மாபெரும் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் கரம்பயம்
அடுத்த செய்திபெரம்பலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்